இதன் முக்கிய நோக்கம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எங்கள் வேலைகளை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதை சோதிக்கவே இதை உருவாக்கியதாக இதழின் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். “இந்த பதிப்பு ஒரு சோதனை படைப்பாகும்,” என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பக்கங்கள் கொண்ட இந்த AI செய்தித்தாள், அனைத்து கடைகளிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்த நாளிதழில் தலைப்பு செய்திகள், மேற்கோள் செய்திகள், மற்றும் கேலி சித்திரங்கள் உட்பட அனைத்துமே AI மூலம் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த AI செய்தித்தாள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கினால், நம்மூர் தினத்தந்தி, தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.