திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணப்பெண் விபத்துக்குள்ளான நிலையில் மாப்பிள்ளை எடுத்த நெகிழ்ச்சியான முடிவு குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த சதாக்ஷி என்ற பெண்ணுக்கும் பிரதீக் என்ற இளைஞருக்கும் இரு குடும்ப பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் மணப்பெண் விபத்துக்குள்ளானார். இதனை அடுத்து அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இரு வீட்டார் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மணப்பெண்ணுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உதவினர். குறிப்பாக மாப்பிள்ளை பிரதீக் மணப்பெண்ணுக்கு தேவையான நேரத்தில் ரத்த தானம் கொடுத்தார் என்பதும் அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் அலுவலகத்தில் விடுமுறை போட்டு மணப்பெண் அருகிலேயே பல நாட்கள் இருந்து அவரை கவனித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து ஓரளவு நடக்கக் கூடிய நிலைக்கு மணப்பெண் வந்த பிறகு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. தங்கள் திருமணம் குறித்த வீடியோவை சதாக்ஷி மற்றும் பிரதீக் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
மணப்பெண் விபத்துக்குள்ளானாலும் அவர் உடல்நிலை சரியாகும் வரை பொறுமை காத்து அது மட்டும் இன்றி அவரது சிகிச்சைக்கு தேவையான முழு உதவியும் மணமகன் பிரதீக் செய்தது மணமகள் வீட்டாரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. அது மட்டும் இன்றி அவ்வப்போது ரத்த தானம் செய்தது மட்டுமின்றி தேவையான பொருள் உதவியும் அவர் செய்துள்ளார்.தற்போது படிப்படியாக சதாக்சி படிப்படியாக குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் இயல்பு நிலையை அடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
