26 வயதுடைய ஷப்னம் என்ற பெண், தனது கணவரை விவாகரத்து செய்து, மூன்று மகள்களை விட்டுவிட்டு, அருகில் வசிக்கும் 12ஆம் வகுப்பு மாணவன் ஷிவாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
குறிப்பாக, இருவருக்கிடையிலான வயது வித்தியாசம், மத வேறுபாடு மற்றும் ஷப்னம் தன்னுடைய குடும்பத்தை தவிக்கவிட்டு சென்றது சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஷப்னம் தனது பெயரை “ஷிவானி” என்று மாற்றிக் கொண்டதாகவும், உள்ளூர் கோவிலில் ஷிவாவை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நாங்கள் இருவரும் விருப்பத்துடன் தான் திருமணம் செய்துகொண்டோம். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுடைய வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமையில்லை. ஏனெனில் நாங்கள் இருவரும் மேஜர்கள். ஒன்றாக வாழவும், ஒன்றாக இறக்கவும் நாங்கள் தயார் என ஷப்னம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பின் சமூகத்தோர் ஆலோசனைக்குப் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. பஞ்சாயத்து முடிவில், “ஷப்னம் விரும்பும் இடத்தில் வாழட்டும்,” என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின், ஷப்னம் தனது இரண்டாவது கணவரை சட்டப்படி விவாகரத்து செய்து, ஷிவாவுடன் வாழ ஆரம்பித்தார்.
ஷப்னம் 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணம் செய்திருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின் இரண்டாவது ஒரு திருமணம் செய்தார். ஆனால் இரண்டாவது கணவர் ஒரு சாலை விபத்தில் காயமடைந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த நிலையில் தான் அதே பகுதியில் வசித்திருந்த மாணவனான ஷிவாவுடன் ஷப்னத்திற்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.