இன்டர்நெட் இருந்தால் மட்டுமே UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற வசதி வந்துள்ளது. இந்த வசதி பல மாதங்களாக இருந்தாலும் பலருக்கு இந்த வசதி குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை. இது குறித்து தற்போது பார்ப்போம்
ஆஃப்லைனில் இந்த சேவையை பெற உங்கள் மொபைல் எண் ஏற்கனவே UPI சேவையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பணம் அனுப்ப வேண்டிய நபரின் மொபைல் எண் அல்லது UPI முகவரி தேவை. இந்த இரண்டும் இருந்தால் இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் UPI மூலம் செலுத்தலாம். இது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்
உங்கள் Dialer ஆப்பை திறக்கவும். *99# டயல் செய்து, Call பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து ஒரு Flash Menu திரையில் தோன்றும். அதில் “1” என்பதை தேர்வு செய்து, Send Money என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். பிறகு, பணம் பெறும் நபரின் மொபைல் எண் அல்லது UPI முகவரியை உள்ளிடவும். அதன்பிறகு, அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிடவும். கடைசியாக, உங்கள் UPI PIN ஐ உள்ளிட்டு பரிவர்த்தனையை முடிக்கவும்.
பணம் அனுப்பப்பட்டவுடன், SMS மூலம் பரிவர்த்தனை பற்றிய தகவல் வரும். இது, UPI செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்திய பிறகு வரும் உறுதிப்படுத்தல் செய்தியை போன்றே இருக்கும்.
பெரும்பாலான நேரங்களில் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும், ஆனால் சில சமயங்களில் கிடைக்காமல் போகலாம். அல்லது UPI செயலியின் சர்வர் பிரச்சனை காரணமாக செயல்படாமல் இருக்கலாம். இந்த மாதிரியான அவசர காலத்தில் இந்த ஆஃப்லைன் முறையை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
இனிமேல், இணைய இணைப்பு இல்லாமலே UPI பரிவர்த்தனை செய்யலாம் என்பதால், எந்த நேரத்திலும் நீங்கள் நிதிநிலை பிரச்சனையில் அகப்படாமல் பாதுகாக்கப்படலாம்!