ஒரே ஒரு கூட்டத்திற்கே பயந்து நடுங்கும் அமைச்சர்கள்.. விஜய்க்கு கூடியது பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் 200 ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல.. ஆர்கானிக் கூட்டம்..திமுக கூட தப்பிக்கலாம்.. ஆனால் ஜால்ரா போடும் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலோடு காலி..!

விஜய்க்கு திருச்சியில் கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவினர் ஒரு பக்கம் உள்ளுக்குள் அச்சத்தில் இருந்தாலும், அதை வெளியே காட்டி கொள்ளலாம், கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது, சீமானுக்கு கூடாத கூட்டமா? அவரால் டெபாசிட் கூட வாங்க…

vijay2

விஜய்க்கு திருச்சியில் கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவினர் ஒரு பக்கம் உள்ளுக்குள் அச்சத்தில் இருந்தாலும், அதை வெளியே காட்டி கொள்ளலாம், கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது, சீமானுக்கு கூடாத கூட்டமா? அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.

திமுகவினர் தான் இப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்றால் தி.மு.க. அமைச்சர்கள் பலர் விஜய்யின் கூட்டத்தை பார்த்து “கூட்டம் கூடுவதெல்லாம் ஓட்டாக மாறாது” என்று கூறி வருகின்றனர். ஓட்டாக மாறாது என்றால் அமைச்சர்கள் விஜய்யை பற்றி பேசுவது ஏன்? ஒருபுறம் பா.ஜ.க.வை எதிர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு, விஜய்யின் வருகை ஏன் இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்துகிறது?

தி.மு.க. அரசு, கடந்த 53 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த வரலாறு, விஜய்யின் வருகையால் உடைக்கப்படலாம் என்ற அச்சம் தி.மு.க.வுக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு 20க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்த தி.மு.க. அரசு, எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், விஜய்க்கு மட்டும் 23 நிபந்தனைகளை விதிப்பது, ஆளும் கட்சியின் அச்சத்தை காட்டுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமான மருத்துவமனையில் நடந்த சிறுநீரகத் திருட்டு, மணல் கொள்ளை, வாக்குறுதிகள் நிறைவேற்றாதது போன்ற பல பிரச்சனைகள் குறித்து விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. மாறாக, “இது ஒரு என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி; மக்கள் கூட்டம் பார்த்து கை தட்டுவார்கள், சென்றுவிடுவார்கள்” என்று பேசி, மக்களை இழிவுபடுத்துகின்றனர்.

இது, தி.மு.க. மக்களையும், தமிழகத்தையும் தனது பரம்பரை சொத்தாக நினைக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது தி.மு.க.வினர் பட்டி ஃபார்முலா மூலம் பணம் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் மக்களை கூட்டியது, அந்த பணத்திற்கு மட்டுமே வரும் கூட்டம். ஆனால், விஜய்யின் கூட்டமோ அப்படி இல்லை, அது ஆர்கானிக்காக வந்தது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க.வின் தவறுகளை ஆதரித்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை, விஜய்க்கு ஆதரவாக பேசுவதில்லை. தி.மு.க.வுக்கு துணை போகும் இந்த கட்சிகள், எதிர்காலத்தில் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அடுத்த தேர்தலில் தி.மு.க.கூட தப்பித்துவிடும், ஆனால், இந்த கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இறுதியாக, விஜய் ஆட்சிக்கு வருவாரோ இல்லையோ, தி.மு.க.விற்கு அவர் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார் என்பது மட்டும் உண்மை. தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை விஜய்யின் வருகை மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.