ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!

  ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படவில்லை என்றால், அவற்றுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் ஆப்பிள் தலைவரான டிம் குக்கை தொடர்புகொண்டு, “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள்,…

iphone

 

ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படவில்லை என்றால், அவற்றுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் ஆப்பிள் தலைவரான டிம் குக்கை தொடர்புகொண்டு, “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள், இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலும் அல்லாமல், அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் நோக்கம் என்னவெனில் அமெரிக்காவின் உற்பத்தித் துறையை வளர்ப்பது என்பது டிரம்பின் எண்ணம். ஐபோன் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு என்பதால், ஆப்பிள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் நிலைக்கு வரவேண்டும் என்பதே டிரம்பின் நோக்கம்.

ஆனால் ஆப்பிள் ஏன் அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கவில்லை? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆப்பிள் ஒரு அமெரிக்க நிறுவனம் என்றாலும், அது ஒருபோதும் ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் மெக் கணினிகளை தயாரித்தாலும், ஐபோனுக்காக சீனாவையே முக்கிய மையமாக வைத்தது. பின்னர், சீனாவுடன் உருவான அரசியல் பதட்டம் காரணமாக, அதன் சப்ளை தொடர் மற்ற ஆசிய நாடுகளுக்கும் பரவியது. இப்போது இந்தியாவும் முக்கிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள உற்பத்தி சூழல், குறைந்த செலவு மற்றும் திறமையான தொழிலாளர்கள் ஆகியவற்றால் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. Foxconn, Tata Electronics, Pegatron ஆகியவை தற்போது இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில், ஐபோன் தயாரிக்கின்றன.

ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்க முடியுமா? என்றால் நிச்சயம் கொள்கையில் இது சாத்தியமே. ஆனால் அமெரிக்கா, தற்போது சில விலையுயர்ந்த கூறுகளை மட்டும் தான் உற்பத்தி செய்கிறது. உதாரணமாக Corning கண்ணாடி, Broadcom ரேடியோ சிப்கள். ஆனால் முழுமையான உற்பத்திக்கு மிகப்பெரிய முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் திறமையான தொழிலாளர்கள் தேவைப்படும். ஆப்பிள் அமெரிக்காவில் $500 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலும், முழு சப்ப்ளை செயினை ஆசியாவிலிருந்து மாற்றுவது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

ஆப்பிள் இப்போது அமெரிக்கா விற்கும் ஐபோன்களில் 20% ஐ இந்தியாவில் தயாரிக்கிறது. 2027க்குள் முழுமையாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா விற்பனை நடைபெறும் என டிம் குக் அறிவித்துள்ளார். ஆனால் இந்தியா தற்போது சீனாவுக்கு மாற்று என்னும் “ஜியோபாலிடிக்கல் ஹெட்ஜ்” ஆகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசு வழங்கும் PLI திட்டமும், Make in India முயற்சியும், இந்தியாவை முன்னிலை நாடாக மாற்றியுள்ளன.

டிரம்பின் வலுப்படுத்தல் காரணமாக, ஆப்பிள் அமெரிக்கா உற்பத்தியை பரிசீலிப்பதாக இருந்தாலும், உடனடியாக அமெரிக்காவுக்கு மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. ஐபோன் உற்பத்தி மையம் இன்னும் ஆசியாவில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை..