உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்கிரீன் ஷேரிங் என்ற புதிய வகை வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் சமீபத்தில் கூட சில புதிய அப்டேட்களை வழங்கியது என்பதும் வாட்ஸ்அப் நிர்வாகம் தரும் வசதிகள் பயனர்களுக்கு மிகப்பெரிய நலனை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் வீடியோ கான்பரன்ஸ் தளங்களில் உள்ளது போல் குறிப்பாக மைக்ரோசாப்ட், கூகுள் மீட், ஜூம் ஆகியவற்றில் உள்ளது வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் அதாவது இன்னும் ஓரிரு மாதங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் பேசலாம் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் மீட்டிங் மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் பேசுவதற்கு இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் இதுவரை ஜூம் மற்றும் கூகுள் மீட் போன்றவற்றை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பும் இந்த வசதியை தர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் தயாராக இருப்பதாகவும் சோதனை முறை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் பயனர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டு தரும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் வீடியோ அழைப்பைத் தொடங்க வேண்டும், பின்னர் “ஸ்கிரீன் ஷேர்” பட்டனைத் தட்ட வேண்டும். இது புதிய திரையை திறக்கும், இது பயனர்கள் தாங்கள் பகிர விரும்பும் பயன்பாடு அல்லது திரையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும். அழைப்பைப் பெறுபவரால் பகிரப்பட்ட திரையை அவர்களின் சொந்த சாதனத்தில் பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் இங்கே:
* நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுடன் திட்டப்பணிகளில் ஒத்துழைக்க திரைப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஆவணங்கள், விளக்கக்காட்சிகள் அல்லது பிற திட்டங்களில் ஒன்றாக வேலை செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.
* ஒரு குழுவினருக்கு விளக்கக்காட்சிகளை வழங்க திரை பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்தலாம். வேலை, பள்ளி அல்லது பிற நிகழ்வுகளில் விளக்கக்காட்சிகளை வழங்க இது உதவியாக இருக்கும்.
* உங்கள் மொபைலில் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள சில தகவல்களை பகிற அல்லது காண்பிக்க இந்த வசதி உதவியாக இருக்கும்.
* உங்கள் ஃபோன் அல்லது கணினியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது தொழில்நுட்ப ஆதரவின் உதவியைப் பெற இது உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் என்பது பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய புதிய மற்றும் பயனுள்ள கருவியாகும். இதில் சில ஆபத்துக்களும் உள்ளதால் இந்த வசதி பயனர்களூக்கு வரமா? அல்லது சாபமா? என்பதை பயன்படுத்தும்போது தான் தெரிய வரும்.