நமக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களை நமக்கு தெரிந்தவர்களுக்கு பார்வேர்ட் செய்யும் வசதி தற்போது உள்ளது. இதில் கூடுதல் அம்சம் இணைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி குழந்தைகள் முதல் தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் இந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை வாட்ஸ்அப் நிர்வாகம் வழங்கி வருகிறது. தற்போது, பார்வேர்ட் செய்யும் மெசேஜில் சில கூடுதல் அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக, வாட்ஸ்அப்புக்கு வரும் மெசேஜ்களை பார்வேர்ட் செய்யும் போது, அதில் கூடுதல் தகவல் சேர்க்க முடியாது. எந்த மெசேஜ் வந்திருக்கிறதோ, அதை அப்படியே தான் பார்வேர்ட் செய்ய முடியும். ஆனால் தற்போது, மெசேஜ் பகிரும் போது, கூடுதலாக சில விவரங்களையும் சேர்த்து அனுப்ப முடியும். இதன் மூலம், டெக்ஸ்ட் மெசேஜ், டாக்குமெண்ட், வீடியோ மற்றும் இமேஜ்களை பகிரும் போது, அதற்கான சில விவரங்களையும் பதிவு செய்ய முடியும்.
இப்போதைக்கு இந்த வசதி பீட்டா வெர்ஷனில் உள்ளது, விரைவில் இது பயனர்களுக்கு அமல்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.