உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் 75 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 47 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்த நிலையில் ஏப்ரல் மாதம் வாட்ஸ்அப் 75 லட்சம் (7.5 மில்லியன்) இந்தியர்களீன் கணக்குகளை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. துஷ்பிரயோகம், ஸ்பேம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கணக்குகள் என கண்டுபிடிக்கப்பட்டு இந்த தடை நடவடிக்கைகளை எடுத்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட 75 லட்சம் கணக்குகளில், 24 லட்சம் முன்கூட்டியே தடை செய்யப்பட்டன என்றும், அதாவது பயனர் புகார்கள் எதுவும் வருவதற்கு முன்பே அவை தடை செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளை விட ஏப்ரல் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 1.6 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படுவதை தவிர்ப்பதற்கான சில குறிப்புகள் இதோ:
* தவறான, ஸ்பேம் அல்லது தீங்கு விளைவிக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்.
* பல கணக்குகளை உருவாக்க வேண்டாம்.
* சட்ட விரோத செயல்களுக்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டாம்.
* வாட்ஸ்அப்பில் நீங்கள் பார்க்கும் ஏதேனும் தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் புகாரளிக்கவும்.
நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தால், வாட்ஸ்அப் சேவை மையத்தை தொடர்புகொண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.