பிராந்திய மொழிகளிலும் வருகிறதா ChatGPT? இந்தியாவில் இருக்கும் OpenAI சி.இ.ஓ பேட்டி..!

By Bala Siva

Published:

ChatGPT என்ற AI தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த OpenAI நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளிலும் AI டெக்னாலஜியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இந்த தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பம் வேலைகளை எளிதாக்குகிறது என்றும் ஐம்பது பேர் நூறு பேர் செய்யக்கூடிய வேலைகளை ஒரு சில மணி நேரத்தில் செய்து விடுவதால் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா வந்துள்ள OpenAI சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் AI குறித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். உலகின் எதிர்காலமே AI தொழில்நுட்பம் தான் என்றும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேலை இழப்பு உள்பட ஒரு சில சிக்கல்கள் இந்த தொழில்நுட்பத்தில் இருந்தாலும் அதை சரி செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அந்தந்த நாட்டு அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே AI தொழில்நுட்பம் இருந்து வருகிறது என்பதும் ஹிந்தி உள்பட பிராந்திய மொழிகளிலும் இதை கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை பேசும் மொழிகளில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் ஹிந்தி, தமிழ் உள்பட அதிக மக்கள் பேசும் மொழிகளில் விரைவில் AI தொழில்நுட்பம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் AI விரைவில் பிராந்தி மொழிகளில் வரும் என்று கூறப்படுவது மேலும் சில வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உங்களுக்காக...