வாக்கிங் செல்வது என்பது உடல் நலத்திற்கு நல்லது மற்றும் புத்துணர்ச்சி ஏற்படும் என்ற நிலையில் வாக்கிங் சென்றால் பணம் கொடுப்போம் என்று சில இந்திய செயலிகள் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் வாக்கிங் சென்றால் உங்கள் காலடி எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பணம் மற்றும் சில ரிவார்டு பாயிண்டுகளை கொடுக்க சில செயலிகள் முன்வந்துள்ளன.
எனவே நீங்கள் சாதாரணமாக வாக்கிங் சென்றாலோ அல்லது அலுவலகம் செல்லும் போது நடந்து சென்றாலோ, உங்கள் காலடி எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பேடிஎம் போன்ற பண பரிமாற்ற செயல்கள் மூலம் பணத்தை பெறலாம். வாக்கிங் சென்றால் பணத்தை கொடுக்கும் செயல்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
StepSetGo:
இந்தியாவில் மிகவும் பிரபலமாகியுள்ள StepSetGo என்ற செயலி, உங்களது ஒவ்வொரு அடியையும் மதிப்புக் கணக்கில் சேர்த்து நாணயங்களை வழங்குகிறது. இந்த நாணயங்களை செயலியுடன் இணைந்துள்ள பார்ட்னர் பிராண்டுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
Sweatcoin:
Sweatcoin செயலி, உங்களது நடைப்பயிற்சி அல்லது ஓடுதல் முயற்சிகளுக்கு மாற்றாக ஸ்வெட்காயின்களை வழங்கி, பரிசு பொருட்கள் மற்றும் சேவைகளில் ஷாப்பிங் செய்ய உதவுகிறது.
Achievement:
Achievement செயலி, உடல்நலனை மேம்படுத்துவதற்கான ஒரு செயலியாகும். இதில், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றுக்கு புள்ளிகள் கிடைக்கின்றன, அவற்றை PayPal அல்லது நேரடி வைப்பாக பணமாக மாற்றலாம்.
Runtopia:
Runtopia செயலி, நடைப்பயிற்சி மற்றும் ஓடுதலுக்கு, பணம் மற்றும் பரிசு அட்டைகளை வெல்ல உதவுகிறது. இதில் உள்ள சவால்களை நிறைவேற்றி, புள்ளிகளை சேமித்து, தள்ளுபடி விலைப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம்.
CashWalk:
நீங்கள் நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், அல்லது கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுடையவராக இருந்தால், CashWalk செயலி உங்களுக்குப் பொருத்தமானது. இச்செயலியின் மூலம் பணம் மற்றும் பரிசு அட்டைகளைப் பெற முடியும்.
Befitter:
Befitter செயலி, நடைப்பயிற்சி மற்றும் ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகள் மூலம் பணம் ஈட்டும் வசதியை வழங்குகிறது.