ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா? வோடோபோனின் சூப்பர் திட்டம்..!

Published:

மொபைல் போனில் வார கணக்கில், மாத கணக்கில், ஏன் வருட கணக்கு ரீசார்ஜ் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சில நிறுவனங்கள் ஒருநாள் ரீசார்ஜ் பிளானை கூட அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வோடபோன் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் ஒரு மணி நேரம் மற்றும் ஒரு நாள் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

வோடோபோன் ஐடியா சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே என்ற இரண்டு புதிய டேட்டா பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொகுப்புகள் அதிக டேட்டா தேவைகளைக் கொண்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டவை.

Vi Super Hour திட்டம்: ரூ.24க்கு 60 நிமிடங்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் முழு டேட்டாவையும் பயன்படுத்தாவிட்டாலும், 60 நிமிடங்களுக்கு இந்த பேக் செல்லுபடியாகும். 60 நிமிடங்கள் முடிந்ததும், டேட்டா வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

Vi Super Day திட்டம்: 24 மணிநேரத்திற்கு 6GB டேட்டாவை ரூ.49க்கு வழங்குகிறது. இந்த பேக் முழு டேட்டாவையும் பயன்படுத்தாவிட்டாலும், 24 மணிநேரம் முழுவதும் செல்லுபடியாகும். 24 மணிநேரம் முடிந்ததும், டேட்டா வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

மேற்கண்ட இரண்டு திட்டங்களும் முழுக்க முழுக்க டேட்டாவுக்கான திட்டங்கள் மட்டுமே. இதில் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் போன்ற பலன்களை கிடைக்காது. அதேபோல் MyVi ரிவார்டு திட்டத்தின் கீழ் உள்ள ஆட்-ஆன்கள் சந்தாதாரர்களுக்கு இந்த திட்டம் கிடையாது.

இந்த திட்டத்தை பயன்படுத்த உங்கள் வோடோபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய, நீங்கள் Vi ஆப் அல்லது இணையதளத்தைப் அணுகலாம் அல்லது அருகிலுள்ள ரீசார்ஜ் கடைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும் உங்களுக்காக...