நாடு முழுக்க கடந்த ஆகஸ்ட் 15 அன்று 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வேண்டுகோளின்படி ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீட்டு முன் தேசியக் கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாடினர். இந்நிலையில் தேசியக் கொடி ஏற்றும் போது பறவை ஒன்று கொடியை பறக்க உதவிய வீடியோ ஒன்று வைரல் ஆனது.
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் நேற்று முன் தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடி ஏற்றும் போது கொடிக்கம்பத்தின் மேல் பகுதில் கொடி சிக்கி கொண்டது. அப்போது எங்கிருந்தோ தூரத்தில் இருந்து வந்த பறவை ஒன்று சிக்கிய கொடியை விடுவித்தது மீண்டும் பறந்து சென்றது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் இதுதான் சுதந்திரப் பறவையா என கலாய்த்தனர். மேலும் இந்நிகழ்வு பலரையும் ஆச்சர்யப் பட வைத்தது.
இது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?
உண்மையாகவே பறவை வந்து கொடியை பறக்க உதவியதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இணையத்தைக் கலக்கிய இந்த வீடியோவின் உண்மைப் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. தேசியக் கொடி ஏற்றும் போது பறந்து வந்த அப்பறவை கொடிமரத்தின் பின்னால் தெரிந்த தென்னை மரத்தின் கிளைகளின் மேல் அமர்ந்தது. கொடியிலிருந்து பூக்கள் விழுந்ததும் அதனைப் பார்த்த பறவை மீண்டும் பறந்து சென்றிருக்கிறது. உண்மையாக பறவை கொடிக்கம்பத்தின் மீது அமரவில்லை.
கேமரா எடுத்த நபரின் ஆங்கிள் பறவை கொடிக்கம்பத்தில் அமர்ந்திருந்தது போல் எடுத்ததால் அவ்வாறு தெரிந்திருக்கிறது. ஆனால் மற்றொரு கேமராவில் பார்க்கும் போது தான் பறவை தென்னைமரத்தில் அமர்ந்து பின் பறந்தது தெரிய வந்தது. கடந்த இரு நாட்களாக பலரையும ஆச்சர்யத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்திய இந்தக் காணொளிக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.