எதிர்பார்த்ததை விட அதிகமாக அட்டாக் செய்த விஜய்.. கிட்னி விவகாரத்தில் விஜய் கொடுத்த உறுதி.. யாராக இருந்தாலும் விடமாட்டேன்.. விஜய் சூளுரை.. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி.. அமெரிக்காவுக்கு பாதை என பொய் சொல்ல மாட்டோம்.. எது சாத்தியமோ அதை சொல்வோம்.. சொன்னதை செய்வோம்..!

இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். தனது பேச்சின் துவக்கத்தில், “இந்த நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…

vijay namakkal

இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். தனது பேச்சின் துவக்கத்தில், “இந்த நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, நாமக்கல்லைச் சேர்ந்தவர். அதேபோல, தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்கிய சுப்பராயனும் நாமக்கல்லை சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டு, அந்த மாவட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் நாமக்கல்லின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் விஜய் பேசினார். “ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த மாவட்டத்தில், முட்டைகளை சேமிக்க சேமிப்புக் கிடங்கு, மற்றும் பாக்டீரியா சோதனைக்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. ஆனால், எந்த கட்சியும் இதை பற்றி யோசிக்கவில்லை” என்று முக்கிய உள்ளூர் பிரச்சனையை குறிப்பிட்டார்.

மேலும், நாமக்கல்லில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு சம்பவத்தை விஜய் கடுமையாக விமர்சித்தார். “இந்த குற்றத்திற்கு முக்கிய காரணம் கந்துவட்டி கொடுமைதான். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நமது ஆட்சியில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று அவர் எச்சரித்தார். விஜய் இந்த விஷயத்தை பேசுவார் என்று எதிர்பார்த்தாலும், தனது ஆட்சி வந்ததும் முதல் பணி கிட்னி திருடர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசைத்தறித் தொழிலாளர்களின் துயர நிலையைப் பற்றி பேசிய விஜய், “ஏமாற்று மாடல் தி.மு.க. அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால்தான், விசைத்தறித் தொழிலாளர்கள் தங்களின் கிட்னியைக் கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தேவையான தீர்வுகளை எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியாக சொல்வோம்” என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தி.மு.க. அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி, அதை நிறைவேற்றினார்களா என்று கேள்வி எழுப்பினார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை விஜய் தனது பேச்சில் பட்டியலிட்டார். “ஒவ்வோர் ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள், கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி, நியாய விலை கடைகளில் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் விநியோகம், போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனப் பல வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால், இவை எதையும் அவர்கள் நிறைவேற்றினார்களா?” என்று ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இது திமுக தலைமை மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இறுதியாக, அவர் தனது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். “சாலை, குடிநீர், மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள்தான் ஒரு மனிதனுக்கு தேவை. நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான, உண்மையான வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்போம். தி.மு.க.வை போல ‘செவ்வாய்க் கிரகத்தில் ஐ.டி. கம்பெனி, அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை’ என போலியான வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம்” என்று ஆளும் கட்சியை நேரடியாக தாக்கினார்.

மொத்தத்தில் விஜய்யின் நாமக்கல் பேச்சு திமுகவை நேரடியாக அட்டாக் செய்துள்ள நிலையில் அடுத்ததாக கரூரில் என்ன பாம் வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.