விஜய்யின் தேர்தல் பட்ஜெட் ரூ.1000 கோடியா? 5 படத்தின் சம்பளம் தானே..!

  திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழக அரசிலில் களமிறங்கியுள்ள விஜய், தேர்தல் பட்ஜெட்டாக 1000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும், இந்த படத்தில் இருந்து ஒரு பைசா கூட மக்களுக்கு வாக்களிக்க பணம்…

vijay

 

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழக அரசிலில் களமிறங்கியுள்ள விஜய், தேர்தல் பட்ஜெட்டாக 1000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும், இந்த படத்தில் இருந்து ஒரு பைசா கூட மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மக்களுக்கு தேவையான,  ஆக்கபூர்வமான செயல்களை செய்ய விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பணக்கார கட்சிகள் என்பதும், இந்த கட்சிகளிடம் பல ஆயிரக்கணக்கான கோடிகள் இருப்பது தெரிந்த விஷயமாகும். இந்த நிலையில், இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்க்க வேண்டும் என்றால், மக்கள் ஆதரவு மட்டும் போதாது, பணமும் வேண்டும் என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதற்காகத்தான் அவர் 1000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தலுக்குள் மூன்று முறை சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து செலவு செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்த நலத்திட்டம் செய்ய முடியாது என்பதால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக கிராம பகுதிகளுக்கு விஜய் சுற்றுப்பயணம் செய்து, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் அவர் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய கட்சி தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் யாரும் தங்களுடைய கைக்காசு செலவழிக்க வேண்டாம் என்றும், கட்சி செலவுக்காக முழுமையாக தன்னிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

விஜய் தற்போது ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், ஐந்து படத்தில் நடிக்கும் காசைத்தான் அவர் செலவு செய்யப் போகிறார் என்றும், அது மட்டும் அல்லாமல் அவர் ஓரளவுக்கு வெற்றி பெறுவார் என்று தெரிந்தாலே தொழிலதிபர்கள் அவருக்கு நன்கொடைகளை வாரி வழங்குவார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் விஜய் 1000 கோடி ரூபாய் செலவு செய்யப் போகிறாரா, அல்லது மக்களின் மனங்களை வெல்ல தன்னுடைய சினிமா கவர்ச்சி மட்டும் பயன்படுத்தப் போகிறாரா என்பதை, இனிவரும் செய்திகளிலிருந்து தான் உறுதி செய்ய முடியும்.