ஏஐ டெக்னாலஜி கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது என்பதும் அறிவியல் துறையில் இருந்து சினிமாத்துறை வரை இந்த டெக்னாலஜி நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இதுவரை கம்ப்யூட்டர் ப்ரோக்ரமர்களுக்கு தான் ஏஐ டெக்னாலஜி எமனாக இருந்த நிலையில் தற்போது வீடியோ எடிட்டிங்கிலும் ஏஐ டெக்னாலஜி புகுந்து விட்டதை அடுத்து வீடியோ எடிட்டர் வேலையும் காலியாக போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அடோப் நிறுவனம் Firefly என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இதுதான் வீடியோ எடிட்டிங் பணிக்கு உதவும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Firefly டூலை வீடியோ எடிட்டிங்கில் எப்படி பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . இந்த வீடியோவில் ஒரு வீடியோவை உருவாக்கிவிட்டு அந்த வீடியோவுக்கு தேவையான பிரைட் கலர் பின்னணி எது வேண்டும் என்று நாம் சொன்னால் போதும், அதுவே செய்து கொடுத்துவிடும்.
அதேபோல் பின்னணியில் ஒரு இசை வேண்டும் என்று சொன்னால் பின்னணி இசையையும் நமக்கு கொடுத்துவிடும். அது மட்டும் இன்றி பின்னணி கலர் மாற்றம் உள்பட அனைத்து பணியையும் ஏஐ முடித்துவிடும்
அது மட்டும் இன்றி சப்டைட்டில் உள்பட அனைத்து பணியையும் ஏஐ டெக்னாலஜி செய்துவிடும். அதைவிட முக்கியமானது என்னவென்றால் வீடியோக்கு ஏத்த மாதிரி பின்னணியை நாம் கூறினால் மட்டும் போதும் அதுவே இன்டர்நெட்டில் சென்று டவுன்லோட் செய்து அதில் இணைத்து விடும்.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்று நாம் ஒரு ஸ்கிரிப்ட் மட்டும் கொடுத்து விட்டால் போதும், அதுவே 3d மாடலில் ஒரு வீடியோவை உருவாக்கி தந்துவிடும். எனவே வீடியோ எடிட்டர்களுக்கு எந்த விதமான பெரிய வேலையையும் இன்றி மொத்த பணியையும் இந்த Firefly செய்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இந்த Fireflyவை பயன்படுத்த ஒரு வீடியோ எடிட்டர் தேவைதானே என்று கூறலாம்.ஆனால் ஒரு வீடியோவை ஒரு எடிட்டர் எடிட் செய்ய கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும் என்றால், ஒரு எடிட்டர் இந்த Firefly பயன்படுத்தினால் ஒரு நாளுக்கு நூறு வீடியோ ரெடி செய்து விடலாம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
எனவே இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முழுக்க முழுக்க வீடியோ எடிட்டர்களின் வேலை காலி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ஏ ஏ டெக்னாலஜி காரணமாக சொந்த ஊருக்கே சென்று ஆடு மாடு மேய்ப்பது, விவசாயம் பார்ப்பது போன்ற வேலைகளை தான் இனிமேல் செய்ய வேண்டிய நிலை வரும் என்று பலர் இந்த செய்திக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.