வாழை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

Published:

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாரி செல்வராஜ் பின்னர் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார். தற்போது மாரி செல்வராஜ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

va1 2

தனது வாழ்க்கையில் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வாழை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியுமே உயிரோட்டம் உள்ளதாக அமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல் போன்றோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

va2 2

திரை பிரபலங்களான இயக்குனர் பாலா, ஷங்கர், ஆர்.ஜே பாலாஜி, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் முதல் நெட்டிசன்கள் பொதுமக்கள் வரை அனைவரும் இந்த திரைப்படத்தை புகழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக வாழை திரைப்படம் இருக்கும் என்று கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டது வாழை.

va3 1

தற்போது வாழை திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாரி செல்வராஜ்க்கு பலர் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ஒரே படத்தின் மூலம் மக்களின் நாயகனாக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

மேலும் உங்களுக்காக...