ராணுவ வீரர்களுக்கும் ஆப்புவைத்தது AI டெக்னாலஜி.. போர் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்..!

Published:

AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி பல வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நூற்றுக்கணக்கான மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த டெக்னாலஜி ஒரு சில மணி நேரங்களில் மிகவும் எளிமையாக செய்து விடுவதால் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி வேலை நீக்க நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

உலகில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI டெக்னாலஜி நுழைந்துவிட்டதை அடுத்து எதிர்காலம் என்பது இளைஞர்களுக்கு மிகப்பெரிய கேள்வி குறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சில துறைகளில் AI டெக்னாலஜி நுழையவே முடியாது என்று கூறப்பட்டாலும் அந்த துறைகளிலும் நுழைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

அந்த வகையில் தான் தற்போது ராணுவத்திலும் AI டெக்னாலஜி நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் f16 போர் விமானத்தை சோதனை செய்ய தற்போது AI டெக்னாலஜி பயன்படுத்தி வருவதாகவும் மனிதர்கள் இயக்கும் விமானங்களை விட AI டெக்னாலஜி மிகவும் சிறப்பாக போர் விமானத்தை இயக்கி வருகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நெறிமுறைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை கேள்வி எழுப்பக்கூடும் என்றாலும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களை போரில் பலி கொடுப்பதை தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களை மிகவும் பாதுகாப்பாகவும் கச்சிதமாகவும் AI ரோபோட்கள் இயக்கி வருகிறது என்றும் மனிதர்கள் கூட இந்த அளவுக்கு கச்சிதமாக இயக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது

எனவே ராணுவத்தின் எதிர்காலம் என்பது AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் ரோபோ மனிதர்கள் தான் இருக்கும் என்றும் ஒரு போரின் வெற்றியை ஒரு இயந்திரம் தீர்மானிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மனித சிப்பாய்கள் போரில் ஈடுபடும்போது ஆபத்தான நிலை ஏற்படும் என்று ஆனால் AI டெக்னாலஜியால் உருவாக்கப்படும் ரோபோ வீரர்கள் போரில் சேதம் அடைந்தாலும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ராணுவ வீரர்களுக்கு ஆள் எடுக்கும் முறை என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் காலம் ஒரு காலத்தில் வரும் என்றும் அப்போது வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்ட AI டெக்னாலஜி ராணுவத்திலும் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...