மால்வேர் அட்டாக்.. ஏடிஎம் உள்பட 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

மால்வேர் அட்டாக் காரணமாக இந்தியாவில் உள்ள 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஏடிஎம் பண வர்த்தனையை கூட நடைபெறவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக வங்கிகளின் பண பரிவர்த்தனை பாதுகாப்பானவை என்று கூறப்படும் நிலையில்  அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று திடீரென  ரான்சோம்வேர் மால்வேர் அட்டாக் காரணமாக 300 சிறிய வங்கிகள் பண பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டதாகவும் குறிப்பாக யுபிஐ, ஏடிஎம் சேவை கூட செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலும் இந்த சிக்கலில் மாட்டியிருப்பது சிறிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தான் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக என்பிசிஐ தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தற்காலிகமாக அனைத்து பண பரிவர்த்தனைகளையும் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் அதன் பிறகு பணம் பரிவர்த்தனை இயல்பு நிலைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டேட் வங்கி உள்பட சில பெரிய வங்கிகளுக்கும் இந்த சிக்கல் இருந்தாலும் அவை ஒரு சில மணி நேரத்தில் சரியாகிவிட்டது என்றும் ஆனால் சிறிய வங்கிகள் தான் இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை காரணமாக சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஏராளமானோர் தற்போது பணம் எடுக்க முடியாமல் டெபாசிட் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சைபர் செக்யூரிட்டி இந்த பிரச்சனையை தீவிர முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த பிரச்சனைக்கு மூல காரணம் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.