இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்று இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ட்ரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் போது எலான் மஸ்க் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொலைபேசியில் நடந்த இந்த உரையாடலில், ஜெலன்ஸ்கி இடம் டிரம்ப் பேசிய பின், அவர் போனை எலான் மஸ்க் அவர்களிடம் கொடுத்ததாகவும், ஜெலன்ஸ்கி மற்றும் எலான் மாஸ்க் இருவரும் சில முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே புதின் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்த போர் முடிவுக்கு வருவது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உக்ரைன் நாடு முழுவதும் ஸ்டார்லிங்க் செல்போனையும் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரம்ப் அரசில் எலான் மஸ்க் அவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.