55 கிமீ செல்ல ரூ.4000. உபெர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்..!

Published:

பெங்களூரில் 55 கிலோ மீட்டர் பயணம் செய்ய உபெர் நிறுவனம் ரூபாய் 4000 கட்டணம் நிர்ணயத்தை அடுத்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக அரசு உத்தரவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் பயனாளி ஒருவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு செல்ல ரூபாய் 4051 கட்டணம் பெறப்பட்டதாக பதிவு செய்துள்ளார். விமான நிலையத்திலிருந்து வெறும் 55 கிலோமீட்டர் மட்டுமே உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு செல்வதற்கு 4000 என்பது மிக அதிக தொகை என்றும் அவர் அதில் பதிவு செய்திருந்தார்.

இந்த ட்விட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனதை அடுத்து சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையர் எஸ்எம் சித்தராமப்பா உபெர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு சாலை போக்குவரத்து ஆர்டிஓவுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து உபெர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் அந்த பயனளி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் விமானத்தில் வந்த டிக்கெட் கட்டணத்தை விட விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லும் கட்டணம் அதிகம் என்றும் இதை கண்டு கண்டிப்பாக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அரசு இந்த விஷயத்தில் சீரியஸாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

உபேர் மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகம் தரப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை பொதுமக்களிடம் இருந்து இதுவரை இதுவரை புகார் வந்துள்ள நிலையில் இனிமேல் கட்டணத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இதுபோன்ற பிரச்சனைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கர்நாடக மாநில அரசு எந்த வகையில் அனுப்பும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...