பிரிட்டனைச் சேர்ந்த ஜானிடா, 2013 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தனது குடும்பம் ஐந்து நபர் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கனவு கண்டிருந்தார். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் இருப்பதை அறிந்ததும் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், கர்ப்பத்தின் 30-வது வாரத்தில் குறை பிரசவம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
இரட்டை குழந்தைகளுக்கு ஹேரி, தோமஸ் என பெயர் வைக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்தனர். இந்த நிலையில், ஹாரி வெறும் 630 கிராம் எடையுடன் இருந்ததாகவும், ஆனால் தோமஸ் அதைவிட இருமடங்கு எடையுடன் ஆரோக்கியமாக பிறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோமஸ் ஒரு மிகவும் அபூர்வமான நிலைமையில் இருந்தாலும் ஹேரி நிலைமை தான் மோசம் என்றும், அவனுடைய கீழ் கால்களில் எலும்புகள் இல்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல், ஹேரிக்கு தொற்று நோய் ஏற்பட்டது. அதன் விளைவாக, குடலின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டதால், அவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மொத்தம் 20 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட ஹேரி அதன்பின் ஆரோக்கியமாக மாறிவிட்டதாகவும், தற்போது தனது இரட்டை குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதை அறிந்ததிலேயே மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், மற்றொரு குழந்தை வெறும் 630 கிராம் எடையுடன் பிறந்தாலும், இருவரையும் ஒரே மாதிரி அன்பு செலுத்தி வளர்த்ததாகவும், இன்று அவர்கள் இருவரும் தனது ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கனவு கண்டபடி, அதன் பிறகு இன்னொரு குழந்தை பிறந்ததால், தற்போது ஐந்து நபர் கொண்ட குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.