இந்த நிலையில், சிலர் பாதுகாப்புக்காக கட்டிய பணம் திரும்ப வரவேண்டும் என்பதற்காக “ரிட்டர்ன் ஆன் பிரீமியம்” என்ற பிளானை தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு கட்டினால், 75 வயதுக்கு மேலும் உயிரோடு இருந்தால், பாலிசிதாரர் கட்டிய பணம் மட்டும் திரும்ப கிடைக்கும்.
ஆனால், அதே நேரத்தில் பண வீக்கத்தினைப் பொருத்தவரை, பாலிசிதாரர் பெறும் தொகை திருப்தியாக இருக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது மட்டும் இல்லாமல், ப்யூர் டேர்ம் பிளான் பாலிசியின் போது, பிரீமியம் தொகை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், “ரிட்டர்ன் ஆன் பிரீமியம்” என்ற பிளானில், பிரீமியம் கட்டணம், ப்யூர் டேர்ம் பிளானை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
உதாரணமாக, டேர்ம் பிளானின் பிரீமியம் தொகை ₹10,000 என்றால், திரும்ப பணம் கிடைக்கும் பிளானில் பிரீமியம் தொகை ₹20,000 ஆக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, டேர்ம் பிளான் என்பது ஒரு பொருளாதார பாதுகாப்புக்காகவே என்பதை கருத்தில் கொண்டு, ப்யூர் டேர்ம் பிளானை எடுப்பதே சிறந்தது. இருப்பினும் இது குறித்து உங்கள் பொருளாதார ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று பின்னர் முடிவெடுக்கலாம்.