அதிமுக கூட்டணியில் இப்போதைக்கு பாஜக மட்டுமே இணைந்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை தான் நடந்து வருவதே தவிர, இன்னும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மொத்தமாக பாஜக தலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தள்ளிவிட்டுவிட்டதாகவும், எந்த கட்சியிடமும் சென்று “நான் கூட்டணிக்கு வாருங்கள்” என்பதை சொல்ல மாட்டேன் என்றும், “நீங்களே கூட்டணிக்கு குறித்த பேச்சுவார்த்தையை அமைத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறிவிட்டு, நழுவிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்குவது என்ற உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தான் பாஜக தற்போது ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியை கொடுப்பது என்பதை எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், ஓ.பி.எஸ். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர்களை இரட்டை இலை சின்னத்தில் நிற்க அனுமதிக்க மாட்டேன் என்றும், அவர்கள் பாஜக சின்னத்தில் அல்லது சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பதாகவும், எந்த காரணத்தை முன்னிட்டு இவர்களை அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என்று பாஜகவிடம் சொல்லிவிட்டதாகப் புறப்படுகிறது.
அதேபோல், தேமுதிக மற்றும் பாமகவிடம் ராஜ்யசபை தொகுதி குறித்த உத்தரவாதத்தையும் தரமாட்டேன் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.
மொத்தத்தில், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.