பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அனைத்தும் வீணா போச்சே.. அமெரிக்காவுக்கு விழுந்து விழுந்து ஜால்ரா போட்டது வேஸ்ட்டா? நோபல் பரிசெல்லாம் கொடுக்கனும்ன்னு சொன்னேனடா..நொந்து நூலான பாகிஸ்தான்..!

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மோதலை தான் “எளிதில்” தீர்த்து வைக்க முடியும் என்று கூறியுள்ளார். அத்துடன், இந்த பதற்றத்துக்குப் பாகிஸ்தான்…

trump 1

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மோதலை தான் “எளிதில்” தீர்த்து வைக்க முடியும் என்று கூறியுள்ளார். அத்துடன், இந்த பதற்றத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதலுக்கு பாகிஸ்தானே காரணம். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை தாக்கியதாகவோ அல்லது அங்கே ஒரு தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவோ நான் அறிகிறேன். பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறேன். அப்படி நான் இந்த விஷயத்தில் தலையிட நேரிட்டால், இது எனக்கு எளிதாக தீர்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் மீது முதலில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் தான் என்பதை புரிந்து கொண்ட டிரம்ப், அதிலும் குழந்தைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மரணமடையும் அளவுக்கு தாக்குதல் நடத்தியது ட்ரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நட்பு நாடாக இருந்தாலும், தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தாலும், இந்தியா – பாகிஸ்தான் போரை டிரம்ப் தான் நிறுத்தினார் என ஜால்ரா போட்டாலும், பாகிஸ்தான் மீது தவறு இருக்கிறது என்பதால் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், இந்த போரை எல்லாம் நிறுத்துவது எனக்கு ஒரு மேட்டரே இல்லை, ஒரு சில நிமிடங்களில் நிறுத்திவிடுவேன் என்று கூறியது, பாகிஸ்தானை அவர் எந்த அளவுக்கு மதித்து வைத்திருக்கிறார் என்பது கண்கூடாக தெரிய வருகிறது.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு சில நாட்களுக்கு நீடித்த தற்காலிக சண்டை நிறுத்தம் மீறப்பட்டு, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மண்ணில் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் நிலையிலேயே டிரம்ப்பின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட சுமார் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

தன்னை உலக அமைதி ஏற்படுத்துபவராக மீண்டும் முன்நிறுத்திய டிரம்ப், இந்த மோதலையும் தீர்ப்பதன் மூலம் இது தான் முடிவுக்கு கொண்டுவரும் ஒன்பதாவது போராக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

“நான் போர்களை தீர்ப்பதை விரும்புகிறேன். ஏனென்றால், மக்கள் கொல்லப்படுவதை தடுக்க நான் விரும்புகிறேன். நான் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளேன், இந்த மோதலிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் இந்த பேட்டியை கொடுத்த சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு பயணம் மேற்கொண்டு, ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மண்ணில் செயல்படும் பாகிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அடைக்கலம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த எல்லை தாக்குதல்களின் பின்னணியில், இந்த மோதலை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எவ்வளவு தூரம் முன்னேறும் என்பது கேள்வியாக உள்ளது.

இந்த மோதல் குறித்து அமெரிக்காவின் தலையீடு எந்த அளவில் இருக்கும், டிரம்ப் மத்தியஸ்தம் செய்வாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்