பாகிஸ்தானும் சீனாவும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது.. இந்தியாவை மறைமுகமாக பயமுறுத்துகிறாரா டிரம்ப்? சீனா நண்பனாகிவிட்டது.. பாகிஸ்தான் அணு ஆயுத மையங்களை ஆபரேஷன் சிந்தூரின் போதே அழித்தாகிவிட்டது.. இந்த பூச்சாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ டிரம்ப்.. அப்படியே தாக்கினாலும் மோதி பார்த்துடலாம்..!

பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு…

atom

பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் அணு ஆயுத சோதனைகளைத் தொடர டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், தனது உத்தரவை நியாயப்படுத்த, அமெரிக்கா மட்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட பல அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் சோதனைகளை நடத்திக்கொண்டு இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதை பற்றிப் பேசுவதில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

“ரஷ்யாவும் சீனாவும் சோதிக்கின்றன, ஆனால் அவர்கள் அதை பற்றி பேச மாட்டார்கள். நாம் ஒரு வெளிப்படையான சமூகம் என்பதால் பேசுகிறோம். அவர்கள், வெளியே சொல்வதில்லை என்று கூறிய ட்ரம்ப், பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவும் நிச்சயமாக சோதனைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

அவர்கள் அதை வெளியே வந்து சொல்வதில்லை. மக்கள் என்ன நடக்கிறது என்று சரியாக தெரியாத வகையில் நிலத்தடியில் மிகவும் ஆழமாக சோதிக்கிறார்கள். லேசான அதிர்வை மட்டுமே உணர்வீர்கள்,” என்றும் அவர் கூறினார். நிலத்தடி அணு ஆயுத வெடிப்பால் ஏற்படும் பூகம்பம் போன்ற அலைகளை கண்டறிய உலகளாவிய கண்காணிப்பு நிலையங்கள் இருந்தாலும், ட்ரம்ப் இதுபோன்ற சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பே இல்லை என்றும், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானின் அணு ஆயுத மையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதே நேர்காணலில், கடந்த மே மாதம் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் விளிம்பில் இருந்ததாகவும், அதைத் தான் வர்த்தக மற்றும் கட்டண அச்சுறுத்தல்கள் மூலம் தடுத்து நிறுத்தியதாகவும் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரினார்.

நான் தலையிடாமல் இருந்திருந்தால் பல மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள். அது ஒரு மோசமான போர். எல்லா இடங்களிலும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்காவுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டீர்கள் என்று இரு நாடுகளிடமும் நான் சொன்னேன்,” என்று அவர் தெரிவித்தார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றன என்ற ட்ரம்ப்பின் கூற்று, இந்தியாவுக்கு புதிய கவலைகளை அளிக்கிறது. இந்தியா 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த அணு ஆயுத சோதனைகளையும் நடத்தாமல் ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை பின்பற்றுகிறது.

இந்தியா: அணு ஆயுதக் கையிருப்பு: 180 (2025 கணக்கு).

பாகிஸ்தான் அணு ஆயுதக் கையிருப்பு: 170.

சீனா அணு ஆயுதக் கையிருப்பு: 600 என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-ல் சீனா சோதித்த FOBS (Fractional Orbital Bombardment System), அதாவது பூமிச் சுற்றுப்பாதையின் ஒரு பகுதிக்குள் அணுகுண்டுகளை நிலைநிறுத்தும் அமைப்பு, அதன் கணிக்க முடியாத பயண பாதையின் மூலம் இந்தியாவின் PDV (Prithvi Defence Vehicle) போன்ற தடுப்பு ஏவுகணைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போக்ரான்-III வாய்ப்பு: 1998-ல் நடந்த போக்ரான்-II அணு ஆயுத சோதனையில் தெர்மோநியூக்ளியர் (ஹைட்ரஜன் குண்டு) சோதனை எதிர்பார்த்த 200 கிலோடன்னுக்கு பதிலாக 10-15 கிலோடன் மட்டுமே விளைந்தது என்று டிஆர்டிஓ விஞ்ஞானி கே. சந்தானம் எழுப்பிய சந்தேகம் இன்னும் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா மீண்டும் சோதனை நடத்துவதும், பாகிஸ்தான்-சீனா சோதனைகள் பற்றிய ட்ரம்ப்பின் கூற்றும், இந்தியா தனது ஹைட்ரஜன் குண்டின் செயல்திறனை நிரூபிக்கவும், அக்னி-VI ICBMகள் அல்லது கே-5 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளுக்கான ஆயுதங்களை செம்மைப்படுத்தவும் போக்ரான்-III சோதனையை நடத்த ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.