அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள், டிரம்ப் பதவி ஏற்கும் முன் அமெரிக்காவுக்கு திரும்பி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்ற உடன் வெளியுறவு கொள்கையில் சில மாற்றங்கள் உடனடியாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மாணவர் விசாவில் இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் மாணவ மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள், இந்தியா உள்பட சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை காரணமாகவும், சொந்த விருப்பம் காரணமாகவும் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை எடுத்து, சொந்த நாடு திரும்பி உள்ள மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்பு அமெரிக்கா திரும்பி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
டிரம்ப் அதிபராக பதவியேற்றா பின்னர், அமெரிக்கா திரும்புவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற காரணத்தினால் தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.