இன்சூரன்ஸ் பாலிசி தரும் ஏஜெண்டுகள் தங்களுடைய டார்கெட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் மோசடியாக சில பாலிசிகளை விற்பனை செய்வது வருவதாக புகார் எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படிக்காதவர்கள், வயதானவர்கள் ஆகியவர்களை குறிவைக்கும் சில இன்சூரன்ஸ் ஏஜென்ட்டுகள் பிக்சட் டெபாசிட்டில் பணம் போடுவதாக கூறி விட்டு, அந்த பணத்தை இன்சூரன்ஸில் கட்டி விடுவதாகவும், ஒரு ஆண்டுக்குப் பிறகு முதலீடு செய்தவர்களுக்கு இந்த உண்மை தெரிய வருவதாகவும், அதற்குள் அந்த ஏஜென்ட் வேறு நிறுவனத்துக்கு மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு முறை செலுத்தும் பாலிசி என்று கூறி ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொள்ளும் இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள், அதன் பின்னர் அதை வருடா வருடம் கட்டும் பாலிசியாக போட்டு விடுகின்றனர் என்றும், இதன் காரணமாக 11 மாதம் கழித்து இன்சூரன்ஸ் போட்டவர்களுக்கு இந்த சிக்கல் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்த புகார்கள் எழுப்பப்படும் போது, பாலிசிக்கான ஒப்பந்தத்தில் “நீங்கள் படித்து கையெழுத்து போட்டிருக்கிறீர்கள்” என்று ஒரே வார்த்தைகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறி விடுகின்றன. படிக்காதவர்கள் மற்றும் வயதானவர்கள் மட்டுமின்றி, படித்தவர்கள் கூட தற்போது பாலிசி எடுக்கும் போது அதன் விவரங்களை படிப்பதில்லை. எனவே, எந்த ஒரு இன்சூரன்ஸ் பாலிசி போடுவதற்கு முன்பு அதன் முழு விவரங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
படிக்காதவர்கள் மற்றும் வயதானவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் அதை கொடுத்து, அதில் உள்ள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.