மீண்டும் கால் ரெக்கார்டிங் வசதியை கொண்டு வந்த ட்ரூ-காலர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்..!

Published:

ட்ரூ காலர் ஏற்கனவே கால் ரெக்கார்டிங் என்ற வசதியை அளித்திருந்த நிலையில் தற்போது இந்த வசதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி பிரிமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூ காலர் செயலியில் கால் பதிவு செய்யும் ரெக்கார்டிங் வசதி ஏற்கனவே இருந்த நிலையில் திடீரென அது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் ஆகிய இரண்டுக்குமான கால் ரெக்கார்டிங் ஆப்ஷனை ட்ரூகாலர் கொண்டு வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு விதமான ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று ட்ரூ காலர் தெரிவித்துள்ளது. கால் வரும் போது ட்ரூகாலர் தரும் ஒரு பொத்தானை க்ளிக் செய்தால் உடனே கால் ரெக்கார்டிங் ஆகும்.

இந்தியா அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த வசதியை ட்ரூ காலர் கொண்டு வந்திருந்தாலும் பிரிமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் பிரீமியம் சந்தா விலை மாதத்திற்கு 3.99 டாலர் என்றும் வருடத்திற்கு 39.99 டாலர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

true caller1ட்ரூ காலரின் கால் ரெக்கார்டிங் வசதியை பயன்படுத்துவதன் சில நிறைகள், குறைகள் இதோ:

நிறைகள்:

* வணிக அழைப்புகள் அல்லது வாடிக்கையாளர் சேவைக்கான அழைப்புகள் போன்ற முக்கியமான அழைப்புகளை நீங்கள் பதிவு செய்யலாம்.

* அழைப்பின் போது கூறப்பட்டதை மதிப்பாய்வு செய்ய நீங்கள் பதிவுகளைப் பயன்படுத்தலாம்.\

* நீங்கள் பதிவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

குறைகள்:

* அழைப்பில் இருக்கும் மற்ற நபர் ஒரு பீப் ஒலியைக் கேட்கலாம், அது அழைப்பு பதிவு செய்யப்படுவதை அவர்களுக்கு எச்சரிக்கக்கூடும்.

* சில அதிகார வரம்புகளில், மற்ற தரப்பினரின் அனுமதியின்றி அழைப்பைப் பதிவு செய்வது சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...