மயில் கறி சமைத்து வீடியோ வெளியிட்ட யூடியூபர்.. போலீஸ் தேடியதால் தலைமறைவு..!

By Bala Siva

Published:

தெலுங்கானா மாநிலத்தின் பிரபல யூடியூபர்  மயில் கறி சமைத்து சாப்பிட்டதை யூடியூபில் வீடியோவாக வெளியிட்ட நிலையில் அவரை போலீஸ் தேடி வருவதாகவும் அதனை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மயில் கறி சாப்பிடுவது குற்றம் என்றும் இந்தியாவின் தேசிய பறவையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மயில் கறி சாப்பிட்டதாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர்   பிரணாய் குமார் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருவதாக தெரிகிறது.

யூடியூபில் ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் வைத்துள்ள பிரணாய் குமார் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் திடீரென மயில் கறி சமைத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து பிரணாய் குமார் மீது வழக்குப்பதிவு செய்து வந்த நிலையில் அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதாக அறிந்ததும் பிரணாய் குமார் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிப்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

யூடியூபில் அதிக பார்வையாளர்கள் பெற வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வீடியோவை பலர் பதிவு செய்து வரும் நிலையில் சில வீடியோக்கள் சிக்கலில் கொண்டு சென்றுவிடுகிறது என்பதும் இதனால் அவர்களது வாழ்க்கையே சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரணாய் குமார் பிடிப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் பல ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் தேசிய பறவையை காப்பது நமது கடமை என்றும் தேசிய பறவையை கறி சமைத்து சாப்பிடுவது குற்றம் என்றும் கூறப்பட்டு வருகிறது.