ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவீடுகளை தெரிவிக்கும் ஒரு செயலியை டவுன்லோட் செய்த பிறகு, நமது ஆட்காட்டி விரலை டச் ஸ்கிரீன் மீது சில வினாடிகள் வைத்தால் மட்டுமே துல்லியமான முடிவை தரும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நம்பி, பலரும் அந்த செயலியை டவுன்லோடு செய்து, டச் ஸ்கிரீனில் ஆட்காட்டி விரலை வைத்து முடிவை பெற்று வருகின்றனர்.
ஆனால், இவ்வாறு செய்வது ரிஸ்க் என்பதோடு, ஆதார் அட்டை உட்பட, நாம் பல்வேறு விஷயங்களுக்கு கைரேகை பயன்படுத்தி இருப்பதால், இந்த கைரேகையை ஹேக் செய்து மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, டச் ஸ்கிரீன் மீது கைரேகை வைப்பதை தவிர்ப்பதே பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது.
டச் ஸ்கிரீனில் கைரேகை வைக்கும் வகையில் எந்த ஒரு செயலியும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.