இன்று விவசாயம் மேம்பட்டிருக்கிறதா அல்லது வீழ்ச்சியடைந்ததா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. அதிக உற்பத்தி மற்றும் விரைவான லாபம் மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்ட விவசாயத்தில் ஒரு காலத்தில் விதிவிலக்காகவே கருதப்பட்ட ரசாயனங்கள் இப்போது வழக்கமான நடைமுறையாகிவிட்டன.
உற்பத்தியை அதிகரிக்க, உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் பிற செயற்கை ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. அறுவடை முடிந்த பிறகும் பல பழங்கள் மற்றும் காய்கறிகள், புதியதாகவும் நீண்ட நாள் கெடுபிடியாகாமல் இருக்கவும், ரசாயனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்று, நம்முடைய சந்தைகளில் உள்ள உணவுப் பாதுகாப்பு நிலையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு விவசாயி, பச்சை தக்காளிகளை ஒரு ரசாயன திரவத்தில் மூழ்கவைத்து, வியாபார நோக்கத்தில் செயற்கையாக சிவப்பாக்கும் செயலை காணலாம்.
தக்காளி என்றால் ஒருசில நாட்களில் அழுகும் தன்மை உடையது. சந்தை விலை குறைந்திருக்கும்போது, சில விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தங்களது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை கெமிக்கல் உதவியுடன் சேமித்து வைக்கிறார்கள்.
ஆனால் இந்த தக்காளியின் உடல்நலனின் கெடுதலுக்கு காரணமாக்குகிறது. செயற்கை முறையில் பசுமை தக்காளிகளை சிவப்பாக்கும் நடைமுறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரசாயனங்கள் மூலம் வண்ணம் மாறும்போது, தக்காளி புதியதாகவும், கூடுதல் நாட்கள் பிரெஷ்ஷாக இருப்பதுபோல் தெரிகிறது.
இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“கால்சியம் கார்பைடு” போன்ற ரசாயனங்கள், பழங்களை பழுக்க பயன்படுத்தும் போது, உடல்நலத்துக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
விவசாய பொருட்களில் கலக்கப்படும் இந்த ரசாயனங்கள் காரணமாக ஹார்மோன் குழப்பம், செரிமான பிரச்சனை, மற்றும் மோசமான நிலையில் உடற்கூறு சிதைவையும் ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.