உஷார் மக்களே..! மூளையைத் தின்னும் அமீபா.. எச்சரிக்கையாக இருப்பது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

By John A

Published:

சென்னை : கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா தாக்க நோயால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை பறந்திருக்கிறது. எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து மருத்து மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம் கேரளாவில் சிறுவன் ஒருவன் அரிதான மூளைக் காய்சசல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். அவனது மரணத்திற்கான காரணம் மூளையைத் தின்னும் அமீபாவான மெனிகோ என்செபாலிடிஸ் என்ற அமீபா தொற்று என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதே நோய்க்கு மேலும் சில பலியாகினார். இதன் காரணமாக கேரளாவில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இணையத்தில் இந்த தொற்று பற்றிய தேடல் அதிகமானது. மேலும் இந்த நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றிய தேடலும் டிரெண்டிங் ஆனது.

இப்படி ஒரு பெட் லவ்வரா? பிறந்த நாள் பரிசாக நாய்க்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஓனர்..

இதுவரை இந்த நோய் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த அமீபாவானது சுத்தமில்லாத நீரில் குளிக்கும் போது மூக்கின் வழியாக மேலேறி நாசித் துவாரத்தின் வழியாக எளிதாக மூளையைச் சென்றடைகிறது. அங்கு தனது வேலையை ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக நோயாளிக்கு கடுமையான தலைவலி, குமட்டல், காய்ச்சல், வலிப்பு, மனநிலைக் கோளாறு, போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு நோயாளி தீவிரமான நிலையை அடையச் செய்து மரணம் வரை கொண்டு செல்கிறது.

எனவே இந்நோய் குறித்து விழிப்புடன் இருக்க தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேங்கியுள்ள நீரில் குளிப்பதை, பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.