இப்படி ஒரு பெட் லவ்வரா? பிறந்த நாள் பரிசாக நாய்க்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஓனர்..

மும்பை : செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தங்கள் வீட்டில் ஒருவரைப் போலவே நாய், பூனை, மாடு, கிளி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். சிலர் இவற்றையும் மீறி மலைப்பாம்பு, பச்சோந்தி போன்றவற்றையும் வீட்டில் செல்லமாக வளர்த்து வருகின்றனர். இவைகள் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் அவையும் மனிதர்களுடன் ஒன்றிப் பழகிவிட்டால் தங்களது எஜமானருக்காக எதையும் செய்கின்றனர். அதிலும் நாய் போன்ற விலங்குகள் என்றென்றும் நன்றியை மறக்காது.

நாயின் ஓனர் இறந்து விட்டால் சாப்பிடாமல் அவரைத் தேடி அலைந்த நாய்களைப் பற்றி எத்தனையோ செய்திகளில் படித்திருக்கிறோம். மேலும் காவல் துறையில் கூட துப்பறியும் நாய்கள் இறந்து விட்டால் அவைகளின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்கிறார்கள். இப்படி தங்களது வீட்டு செல்லப்பிராணிகளை உயிருக்கு உயிராக வளர்த்து வரும் வேளையில் அவைகளுக்காக நிறைய செலவுகளும் செய்கிறார்கள். அப்படி மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனது செல்லப்பிராணிக்காக காஸ்ட்லியான பிறந்த நாள் கிஃப்ட் -ஐ கொடுத்திருக்கிறார் .

ஒரு பன்றி, மூணு மனுஷங்க.. 51,000 வருட பழமையான கண்டுபிடிப்பு.. வியக்க வைத்த வரலாற்று பின்னணி..

சரிதா சல்கான்ஹா என்ற பெண் டைகர் என்கிற நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய்க்குப் பிறந்த நாள் வரவே உடன் அழைத்துச் சென்று ஒரு நகைக்கடைக்குள் புகுந்து தனது டைகருக்கு சுமார் 2.5 இலட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மாட்டி பிறந்த நாள் பரிசாகக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். நாயும் தங்கச் சங்கிலியைப் போட்டு லாவகமாக போஸ் கொடுத்தது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தெருநாய்களும், மாடுகளும் சாலையில் போவோர் வருவோரை முட்டியும், கடித்தும் வைக்கும் வேளையில் அவற்றைச் சரியாகப் பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம், விலங்குகள் பறிமுதல் போன்றவை நடைபெறும் வேளையில் தனது வீட்டில் ஒன்றாக வளர்க்கும் இந்த டைகருக்கு தங்கச் சங்கிலியையே பரிசாகக் கொடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.