திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி வழக்கமான நடைமுறைகள் உற்சாகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு நேற்று (ஜுன் 21) நடந்தது. திருத்தேரை வடம்பிடித்து இழுக்கும் போது கயிறு அறுந்தது.
அதன்பின் சரிசெய்யப்பட்டு இரண்டாவது முறையாக இழுத்த போது மீண்டும் அறுந்தது. மேலும் மூன்றாவது முறையும் அறுந்து விழ தேரானது சுமார் சில மீட்டர் தூரம் மட்டுமே நகர்ந்து நின்றது.
இப்படியே 5 முறை அறுந்து விழுந்தததால் பக்தர்கள் அபசகுணமாகக் கருதினர்.
அதன்பின் திருச்செந்தூரிலிருந்து மாற்று கயிறு வடம் கொண்டு வரப்பட்டு அதன்பின் தேரோட்டம் நடைபெற்றது. சுமார் 70அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட இந்தத் தேர் வடம் அறுந்து விழுந்தது உடனடியாக காட்டுத் தீ போல் பரவி நெல்லை பரபரப்பு நிலவியது.
ஆமா.. நான் சாதி வெறியன் தான்.. சொல்லிங்கோங்க.. தப்பு ஒண்ணும் இல்ல.. நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேச்சு
இதுகுறித்து இன்று சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், நெல்லையப்பர் கோவில் தேரானது 450 டன் எடை கொண்டது. நேற்று தேரை இழுக்கும் போது நெம்புகோல் தருவதற்கு முன்னதாகவே பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்த போது வடம் அறுந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி அதிக எடை கொண்ட தேருக்கு கயிறினால் தான் வடம் அமைக்கப்படும். மேலும் தேர்களுக்கு இணைப்புப் பகுதியில் இணைப்புச் சங்கிலியும் இருக்கும். 450 டன் கொண்ட தேரை அதற்கான கயிறு வடம் கொண்டு கட்டி இழுத்தால் தான் இழுக்க முடியும். அதன்பின் திருச்செந்தூரிலிருந்து தயாராக இருந்த மற்றொரு கயிறு வடத்தைக் கொண்டு வெற்றிகரமாக திருத்தேர் இழுக்கப்பட்டது.” என்று விளக்கம் அளித்தார்.
இருப்பினும் இந்து முன்னணியினர் இதனைக் கையில் எடுத்துள்ளனர். மேலும் கோவில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.