சிரிச்கிட்டே இரு.. சந்தோஷமா இரு.. ஆரோக்கியமா இரு விஜிம்மா.. தனது நண்பர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஸ்ரீமன்

இன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழக நிறுவனத் தலைவருமான தளபதி விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவிடுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், அடுத்து செப்டம்பர் மாதம் வரப்போகும் தி கோட் திரைப்படத்தின் போஸ்டர்களையும் போட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தி கோட் படக்குழுவும் இன்று இரண்டாவது சிங்கிளை வெளியிட உள்ளது.

ஆமா.. நான் சாதி வெறியன் தான்.. சொல்லிங்கோங்க.. தப்பு ஒண்ணும் இல்ல.. நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேச்சு

வழக்கமான பிறந்தநாளைக் காட்டிலும் 50 வது பிறந்த நாள் என்பதாலும், அரசியல் கட்சித் தலைவராக முதல் பிறந்தநாள் என்பதாலும் சற்று கொண்டாட்டங்கள் கூடுதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் அந்த கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் ஆரம்பகால நண்பரும், அவருடன் பல படங்களில் இணைந்து நடித்து வருபவருமான நடிகர் ஸ்ரீமன் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே இரு.. ஆரோக்கியமா இரு.. சந்தோஷமா இரு.. மைடியர் விஜிம்மா.. நீ நினைத்தது எல்லாமே தன்னாலே நடக்கும்.. உன்னோட கடின உழைப்பு, பொறுமை, சான்ஸே இல்ல. ஹாப்பி பர்த்டே.. ஐ லவ் யூ விஜிம்மா.” என்று நடிகர் ஸ்ரீ மன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாக்களில் இவரது இந்த வாழ்த்துச் செய்தி வைரலாகி வருகிறது.