ஒரே ஒரு மாம்பழத்தின் விலை ரூ.19,000.. அப்படி என்ன இருக்கு அதில்?

By Bala Siva

Published:

ஜப்பானில் உள்ள ஒருவர், அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டோகாச்சி மாவட்டத்தில் மாம்பழங்களை பயிரிட்டு வருகிறார். ஆனால், இந்த மாம்பழங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு மாம்பழம் கிட்டத்தட்ட 19,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த மாம்பழங்கள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை, ஏனெனில் ஒவ்வொன்றும் மிக அதிக சுவை கொண்டது என கூறப்படுகிறது. இதுகுறித்து மாம்பழ விவசாயி கூறியபோது, ‘என்னுடைய மாம்பழத்தின் சுவை ரகசியம் இரண்டே இரண்டு தான். ஒன்று நாங்கள் இயற்கை உரங்களை பயன்படுத்துவோம். இரண்டாவது பனி மற்றும் வெந்நீர் ஊற்றுகள் தான். அதாவது  குளிர்கால மாதங்களில் இருந்து பனியை சேமித்து, கோடையில் அதை சேமித்து மா மரங்களுக்கு பயன்படுத்துவோம்,  குளிர்காலத்தில் இயற்கையான சூடான நீரூற்றுகளைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸை சூடேற்றுவதன் மூலம் சுமார் 5,000 மாம்பழங்களை அறுவடை செய்கிறோம்’ என்று கூறுகிறார்.

மேலும் சில பூச்சிகள் மாம்பழங்களை பழுக்க வைக்கும் செயல் முறையை கடைபிடிப்போம் என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும்  பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அவர் கூறினார்.. குறைந்த ஈரப்பதம் கொண்ட காலநிலை இரசாயனங்களின் தேவையையும் குறைக்கிறது. கூடுதலாக, குளிர்காலத்தில் அறுவடை செய்வதால் தொழிலாளர்களும் எங்களுக்கு எளிதில் கிடைப்பார்கள் என்றும் இது எங்களுக்கு ஒரு கூடுதல் வசதி என்றும் அவர் தெரிவித்தார்,.

எங்களிடம் விளையும் மாம்பழங்கள் சாதாரண மாம்பழங்களை விட 15 டிகிரி பிரிக்ஸ் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்டதாக இருக்கும். அதனால்  வெண்ணெய் போன்ற மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

2011 ஆம் ஆண்டில், எண்ணெய் வணிகத்தில் பல ஆண்டுகளாக இருந்த நான் அதன்பின் மாம்பழ சாகுபடிக்கு மாறினேன். தனது நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ், குளிர்கால மாதங்களில் பழங்கள் வளர்ப்பது சாத்தியம் என்பதை தெரிந்து கொண்டு மாம்பழ பண்ணையை நிறுவினேன் என்றும் அவர் தெரிவித்தார்.