விடுதலை சிறுத்தை கட்சிக்கு எவ்வளவு தொகுதி?.. திருமா கேட்பது கிடைக்குமா?..

தலித் மக்களின் உரிமையை மீட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே திருமாவளவனால் துவங்கப்பட்ட கட்சிதான் விடுதலை சிறுத்தை 40 வருடங்களுக்கு மேல் விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழக அரசியலில் பயணித்து வருகிறது. கடந்த பல தேர்தலிலும்…

mk stalin

தலித் மக்களின் உரிமையை மீட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே திருமாவளவனால் துவங்கப்பட்ட கட்சிதான் விடுதலை சிறுத்தை 40 வருடங்களுக்கு மேல் விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழக அரசியலில் பயணித்து வருகிறது. கடந்த பல தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சி பல வருடங்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2206 தேர்தலிலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை இருக்கிறது..

ஒரு பக்கம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி பங்கீடு ஒதுக்குவது என்பது பற்றிய பேச்சு வார்த்தையை திமுக சமீபத்தில் தொடங்கியது.
முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக முடித்து விட்டதாக தெரிகிறது. விடுதலைச் சிறுத்தையுடன் விரைவில் பேச்சு வார்த்தை நடைபெறவிருக்கிறது..

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தை கூட்டணி அமைத்த போது அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதே தொகுதியை கொடுக்கவே தற்போது திமுக விரும்புகிறது. ஆனால் 10 தொகுதிகள் வரை கேட்டு வாங்கிவிட வேண்டும் என திருமாவளவன் நினைக்கிறாராம்.. அவர் நினைப்பது நடக்குமா? திமுக அதை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிந்து விடும்..