நாளை சந்திர கிரகணம். என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

Published:

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ இருப்பதை அடுத்து சந்திர கிரகணத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்ப்போம்.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. ஒவ்வொரு சந்திர கிரகணமும் ஜோதிடர்களால் அசுபமாக பார்க்கப்படும் நிலையில் இந்த சந்திர கிரகணத்தையும் அசுபமாக பார்த்து சில பரிகாரங்களை ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை நிகழும் சந்திர கிரகணம் இரவு 8 45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நீடிக்கும் என்றும் கிரகண காலத்தில் ஒரு சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சில எளிமையான பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நேரப்படி மே 5ஆம் தேதி இரவு 8.44 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 10 மணி 52 நிமிடம் 59 வினாடிக்கு உச்சத்தில் இருக்கும் கிரகணம், மே 6ஆம் தேதி அதிகாலை 01.01 வரை நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் 4 மணி நேரம் 18 நிமிடம் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது

moon eclipse1சந்திர கிரகணத்தின் போது துலாம், விருச்சிகம், தனுசு, மீனம், மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில பரிகாரங்களை செய்தால் அவர்களுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. அதாவது சந்திர கிரகண நேரத்தில் இறையருளை பெற இறை மந்திரம் உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மே ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று நடைபெற உள்ள இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஆகிய ஐந்து கண்டங்களில் இருப்பவர்கள் பார்க்கலாம் என்றும் பசிபிக், அட்லாண்டிக் இந்திய பெருங்கடல் பகுதியில் முழுமையாக பார்க்கலாம் என்றும் வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது தான் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்த சந்திர கிரகணம் நேரத்தில் பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்திர கிரகணத்தின் எதிர்பாராத கதிர்கள் குழந்தையை பாதிக்க வாய்ப்பு இருப்பதால் சந்திர கிரகண நேரத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூர்மையான பொருளை பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் சந்திர கிரகணம் நேரத்தில் தூங்க வேண்டாம் என்று சந்திர கிரகணத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை அமைதியாக அமர்ந்து கடவுளின் பெயரை தியானம் செய்ய வேண்டும் என்றும் ஒரு சில மந்திரங்களையும் உச்சரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...