தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இந்த ஆண்டின் முதல் நிபா வைரஸ் மரணம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்று நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு…

niba 1

கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்று நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் காலமானதை அடுத்து இந்த ஆண்டின் முதல் நிபா வைரஸ் மரணம் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் பாண்டிகோடு என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அந்த சிறுவன் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த சிறுவன் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கேரள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், நிபா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே கோழிக்கோடு பகுதிகளுக்கு பாதிக்கப்பட்ட மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காய்ச்சல், தலைவலி, மயக்கம், மூச்சு திணறல் ஆகியவை நிபா வைரஸ் அறிகுறிகள் என்றும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நிபா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.