ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோன் விரைவில் வெளிவர இருப்பதாக பல வருடங்களாக உலாவி வந்த செய்திகளை உறுதி செய்யும் வகையில், 2026 ஆம் ஆண்டில் ஃபோல்டபிள் ஐபோன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது, iPhone 18 சீரிஸ் உடன் அடுத்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன் சுமார் $2,000 விலையில் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,75,000 என விற்கப்படலாம் என முன்னணி இதழ் ஒன்று கூறியுள்ளது. ஆனால் இன்னொரு டெக்னிக் இதழ் அமெரிக்காவில் இதன் விலை $2,300 என்றும், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,10,000 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன் ஏற்கனவே சாம்சங் Galaxy Z Fold போன்று புத்தக வடிவில் மடங்கக்கூடியதாக இருக்கும் எனவும் Galaxy Z Flip-ல் உள்ள கிளாம்ஷெல் வடிவமைப்பைப் பின்பற்றாது என்றும் கூறப்படுகிறது.
ஃபோல்டபிள் ஐபோன் குறித்து மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளது. இதன்படி மடக்கிய நிலையில் 5.5 அங்குலம் வெளிப்புற திரை. விரிக்கப்படும் போது 7.8 அங்குல iPad போன்ற பெரிய திரை. ஃபோல்டபிள் பிரச்சனைகள் ஏற்படாத nearly crease-free display. இதன் அளவு 9 – 9.5 mm இருக்கலாம்; மடக்கப்பட்டபோது 4.5 – 4.8 mm மட்டுமே இருக்கும்.
டைட்டானியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கலந்த வலுவான ஃபோல்டபிள் இணைப்பும், திரையின் வளைவுகளை தடுக்கும் liquid metal technology கொண்டதாக இருக்கும்.
ஃபோல்டபிள் ஐபோனில் இரட்டை பின்புற கேமரா மற்றும் மடக்கப்பட்ட நிலையிலும் திறக்கப்பட்ட நிலையிலும் செயல்படும் முன் கேமராவுடன் இருக்கும்.
ஆப்பிளின் இந்த ஃபோல்டபிள் ஐபோன் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லையென்றாலும், 2026-இல் இது மாபெரும் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!