பிக் பாஸ் 8 வது சீசன் ஆரம்பமான முதல் இரண்டு வாரங்கள் சற்று சுமாராக தான் சென்றிருந்தது. ஆனால், அதன் பின்னரும் அவ்வப்போது சில எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் இருக்க மற்ற நேரங்கள் பார்வையாளர்கள் பொறுமையையும் சோதித்திருந்தது. சில போட்டியாளர்கள் ஆர்வமே இல்லாமலும் ஆடி இருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்திருந்த முதல் நாளில் இருந்தே இவர் நிச்சயம் ஃபைனல்ஸ்க்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியவர் தான் தர்ஷிகா.
இவர் கேப்டனாகவும் பிக் பாஸ் வீட்டில் பெயர் எடுத்திருந்த நிலையில், திடீரென அவரது கேம் ஆட்டம் கண்டது. விஷாலுடன் தர்ஷிகாவுக்கு காதல் என ஒரு தகவல் பிக் பாஸ் வீட்டில் கிசுகிசுக்கப்பட, இதன் பின்னர் அவரது ஆட்டமும் சற்று சரிவை சந்தித்திருந்தது. தொடர்ந்து தர்ஷிகா – விஜே விஷால் ஆகியோர் ஒன்றாக சுற்றி வர, பார்வையாளர்களும் அவர்களுக்குள் காதல் இருப்பதாக குறிப்பிட்டு வந்தனர்.
பாதியில் வெளியேறிய தர்ஷிகா
இதனிடையே, பிக் பாஸ் ஃபைனல் வரைக்கும் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷிகா, ஒரு வாரத்திற்கு முன் வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் Bigg Boss Fun Unlimited என்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எலிமினேட் ஆன தர்ஷிகா, சத்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அந்த சமயத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளர் தர்ஷிகாவிடம், ‘நீங்கள் விஜே விஷாலை காதலிக்கிறீர்களா இல்லையா?’ என்ற கேள்வியை முன் வைக்கிறார். இதற்கு பதில் சொல்லும் தர்ஷிகா, “இல்லங்க. அது லவ் கிடையாது. க்ரஷ் தான். அந்த இடம் காதலுக்கான இடம் இல்லை என்பதை நானும் விஷாலும் பலமுறை பதிவு செய்து விட்டோம். ஒருத்தர் மேல் நாம் காண்பிக்கும் அன்பிற்கு வித்தியாசம் உள்ளது” என்கிறார்.
தர்ஷிகா – விஷால் காதலா?..
இதன் பின்னர் கேள்வி கேட்கும் அந்த தொகுப்பாளர், “டாஸ்க் ஒன்றிற்கு Truth or Dare நடந்த போது வெளியே இருந்திருந்தால் யாரை ப்ரபோஸ் செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு விஷால் தர்ஷிகா என கூறியிருந்தார். அப்போது நீங்களும் வெட்கப்பட்டது வரைக்கும் பார்த்தோம்” என்கிறார்.
இதன் பின்னர் பேசும் தர்ஷிகா, “விஷாலை எனக்கு பிடிக்கும். அவர் மீது க்ரஷ் உள்ளது. எந்த இடத்திலும் காதல் என்ற வார்த்தையை பிக் பாஸ் வீட்டிற்குள் பயன்படுத்தவே இல்லை. எனக்கு அந்த உணர்வுகள் பிடித்திருந்தது. அதை நான் வெளிப்படுத்தினேன். அவ்வளவு தான். அது தப்பில்லை என்றும் எனக்கு தோன்றியது” என தர்ஷிகா விளக்கம் கொடுத்துள்ளார்.