மகாலட்சுமியை வழிபடக்கூடிய பல நாள்கள் ஆண்டு முழுவதும் வருகிறது. அதில் தமிழ் மாதங்களில் சித்திரையில் முதலாவதாக வரும் விசேஷமான நாள் அட்சய திருதியை. இன்று தான் அந்த அற்புதமான நாள். இந்த நாளில் எப்படி எந்த நேரத்தில் வழிபடுவதுன்னு பார்க்கலாம்.
அட்சய திருதியை என்றாலே நகைக்கடைகளில் போய் தங்கம் வாங்க வேண்டும். அதைப் பத்திரமாக பீரோவில் வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது ஆண்டு முழுவதும் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. போன வருஷம் வாங்கி இந்த வருஷம் எவ்வளவு பெருகியது என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த நாளின் நோக்கமே வேறு.
மகாலட்சுமியை வேண்டி நம்மால் என்ன முடிகிறதோ அதை எளியவர்களுக்குத் தானம் செய்கிறபோது மகாலட்சுமி நம்முடைய வளத்திற்கும் வாரி வழங்குவாள். அப்படின்னா இது செய்ய வேண்டிய நாள். மகாலட்சுமிக்கு வாசமா இருக்குற இடம் பிடிக்கும். சுத்தமாக இருக்குற இடம் பிடிக்கும். மங்களகரமாக இருந்தால் பிடிக்கும். யாரெல்லாம் நல்லதைப் பேசுகிறார்களோ அவர்களை ரொம்ப பிடிக்கும்.
யாரெல்லாம் ஏழைகளுக்காக இரங்குகிறார்களோ அவர்களை ரொம்ப பிடிக்கும். ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் பிரதிபலனை எதிர்பார்க்காமல் துன்பத்தில் இருந்து அவரைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டி உதவுபவர்களை ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் ஆதிசங்கரரின் வீட்டுக்கு வந்து பிச்சை எடுக்க வருகிறார் ஒருவர். அன்றைய தினம் அவரது வீட்டில் இருந்தது ஒரே ஒரு நெல்லிக்கனி. அதைத்தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார் ஆதிசங்கரர்.
அதுவும் அங்கங்கே அழுகிப் போன நெல்லிக்கனி. ஆனால் ஒருவர் யாசகம் கேட்கும்போது இல்லன்னு சொல்ல அவருக்கு மனசு வரல. அந்த நெல்லிக்கனியைக் கொண்டு போய் தானம் பண்றார். அதே நேரம் தானம்கறது எவ்வளவு உயர்ந்தது? பல பேரு நினைக்கிறாங்க. நிறைய பணம் வச்சிருக்குறவங்க தான் தானம் பண்ணனும். நாங்களே ஒண்ணும் இல்லாம தானே இருக்குறோம். நாங்களே பிறர்க்கிட்ட நாங்க ஏன் பிறருக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் இந்தக் கதை தான் உதாரணம்.
நமக்கே ஒண்ணுமில்லங்கற நிலைமையில இருந்தபோது கூட இருப்பதையும் எடுத்துக் கொடுக்கணும்கற உயர்ந்த உள்ளம் இருக்குது பாருங்க. அந்த உள்ளத்தைத் தான் மகாலட்சுமி பார்த்தாள். அதைத்தான் அவர் மகாலட்சுமியிடம் கேட்டார். இப்படி ஒரு உள்ளம் படைச்சவளை நீ எப்படி பார்க்காம இருக்குறம்மான்னு. இப்படி ஒரு உள்ளம் படைச்சவளுக்கு நீ கருணை காட்டக்கூடாதான்னு கேட்குறார். அப்போதுதான் அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடுறார். அப்போது அவரது வீட்டில் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிகிறது.
நாம என்ன நினைக்கிறோம்னா அட்சய திருதியை அன்னைக்கு மகாலட்சுமியைக் கும்பிட்டால் நம்ம வீட்டுல தங்கமழையாக பொழியும்னு. மகாலட்சுமியைக் கும்பிட்டால் மட்டும் பொழியாது. மகாலட்சுமி வேறு தங்கமழையைப் பொழியச்செய்வாள். தங்கமான அவரது மனம், தங்கமான அவரது குணம், தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், தர்மம் செய்யும்போது கூட நமக்கு பிரதிபலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செய்வது.