டேர்ம் இன்சூரன்ஸ் என்பது மற்ற இன்சூரன்ஸ்களை போல் இல்லாமல், பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றால் முதிர்வு பலன் கிடைக்காது. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால், குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பண பாதுகாப்பை அளிக்கும் என்பதால், இந்த டேர்ம் பாலிசியை பலரும் விரும்பி எடுக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளில், பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால், அதற்குரிய முழு பலன் கிடைக்கும். ஒருவேளை பாலிசி காலம் முடியும் வரை வாரிசுதாரர் உயிரோடு இருந்தாலும், அவர் கட்டிய பணத்துக்கு மேலதிகமாக ஒரு பெரிய தொகை கிடைக்கும். ஆனால் டேர்ம் இன்சூரன்ஸில், பாலிசிதாரர்களுக்கு அசம்பாவிதம் நடந்தால் தான் பலன் கிடைக்கும். இல்லையென்றால், கட்டிய பணம் அனைத்தும் வீணாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், குறைந்த பிரிமியத்தில் மிக அதிக தொகை கிடைக்கும் என்பதால்தான் இந்த பாலிசியை பலரும் எடுக்கின்றனர். குறிப்பாக, சின்ன வயதிலேயே டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துவிட்டால், 75 வயது வரை குறைவான பாலிசி தொகையை கட்டிவிடலாம். ஆனால், நமக்கு கிடைப்பது கோடி கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான், டேர்ம் பாலிசி எடுப்பதில் பலரும் தற்போது முன் வருகின்றனர். மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடு சார்ந்தவை என்பதால், பெரிய அளவில் பணம் கிடைக்காது. ஆனால், டேர்ம் இன்சூரன்ஸில் ஒரு குடும்பத்தில் வருமானம் உள்ளவர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பம் 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை பாதுகாப்பு பெறும் என்பதால், இந்த பாலிசியை பலரும் தற்போது எடுத்து வருகின்றனர்.