ஆந்திர அரசின் முக்கிய பதவியை டாடா சன்ஸ் தலைவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்ததை எடுத்து டாடா நிறுவனத்திடம் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர அரசின் பொருளாதார வளர்ச்சி குழுவின் இணைத் தலைவராக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் அவர்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நியமனம் செய்துள்ளார். நேற்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் அமராவதியில் டாடா சன்ஸ் தலைவரை சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது இந்த பதவியை அவருக்கு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் சந்திரசேகரன் நன்றி தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகர் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி, ஆந்திர அரசை பொருத்தவரை முதலீட்டிற்காக பல்வேறு தொழில் தலைவர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரு பொருளாதார மேம்பாட்டு குழு உருவாக்கி வருகிறது, 2047 ஆம் ஆண்டுக்குள் ஆந்திர மாநிலத்தை சுவர்ண ஆந்திராவாக மாற்றும் நோக்கத்துடன் இந்த இந்த குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் இணை தலைவராக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த பதவி அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
