செல்போன் வந்த பிறகு உள்ளங்கைக்குள் உலகம் அடங்கி விட்டது. நம்முடைய அனைத்து தனிப்பட்ட விபரங்களும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானலும் பார்க்கும் வகையில் மொபைல் எண்ணை வைத்து நம்முடைய தகவல்களை பார்வையிடலாம்.
முன்பெல்லாம் ஒருவரிடத்தில் உள்ள நிலத்தினை இன்னொருவருக்கு விற்பனை செய்யும் போது ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழும். ஆனால் இப்போது சந்தேகத்திற்கான வாய்ப்பே கிடையாது. அனைத்தும் பத்திரப்பதிவு, வருவாய்த்துறை ஆகியவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டதால் ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக நம்பகமானதாக உள்ளது.
இப்படி தங்களது ஆவணங்களில் உள்ள விபரங்களைப் பார்வையிட பொதுமக்கள் முதலில் ஆவணங்களையே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இனி இதற்கான அவசியம் கிடையாது. எப்படி டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்த பிறகு அனைத்து ஆவணங்களும் கணிணியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்வையிடும் நோக்கில் அனைத்தும் இணையமயமாக்கப்பட்டு விட்டது.
UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..
அந்த வகையில் தற்போது பொதுமக்கள் தங்களது நில ஆவணங்களைப் பார்வையிடும் வகையில் தமிழ் நிலம் புவிசார் தகவல் என்ற பெயரில் செயலி (ஆப்ஸ்) துவங்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் தங்களது நில விபரங்கள், பட்டா, சிட்டா, நிலப்பரப்பு, அ-பதிவேடு, அரசின் புறம்போக்கு நிலங்கள், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிடலாம். மேலும் புதிய பட்டா போன்றவற்றிற்கும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்படி நிலம் வரைபடம் சார்ந்த அனைத்தும் தமிழ் நிலம் செயலியின் மூலம் பெறலாம். இந்தச் செயலியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சென்னை எழிலகத்தில் துவக்கி வைத்தார்.