சாலையோரத்தில் பேப்பர் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் செஞ்ச தரமான நெகிழ்ச்சி சம்பவம்

By John A

Published:

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தினமும் காலை நடைபயிற்சி செல்வது வழக்கம். பல ஆண்டுகளாக இதைக் தினமும் கடைப்பிடித்து வருகிறார். அப்படி செல்கையில் பல்வேறு பொதுமக்களைச் சந்திப்பதும் வழக்கம். அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்துவார்.

அந்தவகையில் இன்று காலை சென்னையில் வழக்கம் போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியத்தை, அந்த வீதிகளில் சாக்குப் பைகளில் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் அடையாளம் கண்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.

தோனியின் முக்கியமான சாதனைக்கு வேட்டு வைக்க போகும் ரோஹித்.. இலங்கை தொடரில் கிடைச்ச பொன்னான வாய்ப்பு

அப்போது அந்த நபரின் தோற்றம் மற்றும் நடவடிக்களைக் கவனித்த மா.சுப்ரமணியன் அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நபர் தனது பெயர் ராஜா என்றும் சொந்த ஊர் திருச்சி எனவும், தினந்தோறும் இதுபோன்ற பேப்பர் கழிவுகளை எடுத்து அதை பழைய பேப்பர் கடையில் போட்டு அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்வதாகவும், சாலையோரங்களில் படுத்துறங்குவதாகவும் தெரிவித்தார்.

இவரின் நிலையைக் கண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டென எதையும் யோசிக்காமல் அவரின் வாழ்வாதாரத்தினை மாற்ற நினைத்தார். அந்த வகையில் அவரை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து பின்னர் கலைஞர் நூற்றாண்டு உயர்ரக பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளச் செய்து. அதன்பின் அங்கேயே தற்காலிகப் பணி ஒன்றும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அமைச்சரின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.