நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்

எப்போது சோஷியல் மீடியாக்கள் உருவாகத் தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டில் ஒவ்வொருவரும் நடிகர்களாகி விட்டனர். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பின்றி தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் தகுந்த வரப்பிரசாதமாக அமைந்து தனிநபர் திறமைகளை…

Reels Compettion

எப்போது சோஷியல் மீடியாக்கள் உருவாகத் தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டில் ஒவ்வொருவரும் நடிகர்களாகி விட்டனர். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பின்றி தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் தகுந்த வரப்பிரசாதமாக அமைந்து தனிநபர் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த பிளாட்பார்ம்-ஆக அமைத்துக் கொடுத்தது. 1 நிமிடத்தில் குறு வீடியோக்களாக ரீல்ஸ் எடுப்பதில் துவங்கி லைவ் வீடியோக்களைப் பதிவிட்டு புகழ் பெறுகின்றனர்.

மேலும் இதன் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்து செட்டில் ஆனவர்கள் ஏராளம். இன்னும் பலர் நல்ல கருத்துள்ள வீடியோக்களை ரீல்ஸ்களாக கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்த அளவிற்கு சமூக வலைதள ரீல்ஸ்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அதே அளவிற்கு தீங்கும் ஏற்படுகிறது. ரீல்ஸ் எடுப்பவர்கள் ஆபத்தினை உணராமல் லைக், வியூஸ்களுக்காக உயிரைப் பணயம் வைக்கின்றனர். இதனால் உயிர்ப்பலிகளும் ஏற்படுகிறது.

இந்திய ரயில்வே Lower Berth இல் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது… உங்கள் பயணத்திற்கு முன்பு இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…

இந்நிலையில் ரீல்ஸ் எடுப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களை அங்கீகரிக்கும் நோக்கிலும் தமிழக அரசு சூப்பர் வாய்ப்பினை அளித்திருக்கிறது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்களான நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், விடியல் பயணத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் ஏதேனும் ஒன்று குறித்து அதன் சாதனைகளை விளக்கும் நோக்கிலும்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் சிறந்த முறையில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அமைச்சர் சாமிநாதன் தலமையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீல்ஸ்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tndiprmediahub@gmail.com

கடைசி தேதி :  ஆகஸ்ட் 15, 2024

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் 3 ரீல்ஸ்கள் தமிழக அரசின் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோஷியல் மீடியா பிரியர்களே என்ன உடனே போனும் கையுமா எங்க கிளம்பிட்டீங்க.. ரீல்ஸ் எடுக்கத்தானே..!