2025 பொது விடுமுறை : எத்தனை நாட்கள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அரசாணையை கவனித்தீர்களா

By Keerthana

Published:

சென்னை: 2025-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2025ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையில் விடுமுறை நாட்கள் பெரும்பாலும், வார நாட்களில் வருகிறது.

இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளூர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறையாகும். இதில் குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை தெலுங்கு வருட பிறப்பும், 31ஆம் தேதி ரமலான் பண்டிகை என தொடர் விடுமுறை அமைந்துள்ளன.

ஏப்ரல் ஒன்றாம் தேதி செவ்வாய்கிழமை அன்று வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை ஆகும். ஏப்ரல் மாதத்தில் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம், 18ஆம் தேதி புனித வெள்ளி ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மே மாதத்தில் ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம், ஜூன் 6 பக்ரீத், ஜூலை 6 மொகரம் என மூன்று மாதங்களிலும் தலா ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை விடப்படுகிறது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுந்ததிர தினமும், 16 சனிக்கிழமை கிருஷ்ணர் ஜெயந்தி, 27ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி என ஆகஸ்ட் மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபி பண்டிகை என ஒரு நாள் தான் செப்டம்பரில் விடுமுறையாகும்.. அக்டோபர் ஒன்றாம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை, அக்டோபர் 2ஆம் தேதி வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி மற்றும் விஜய தசமி அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி என மொத்தம் அக்டோபரில் 3 நாட்கள் அரசு விடுமுறையாகும். அதன்பிறகு நவம்பரில் விடுமுறை எதுவும் இல்லை.. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் எல்லா மாதத்திலும் அரசு விடுமுறை உள்ளது என்றாலும் நவம்பரில் மட்டும் விடுமுறை இல்லை.. முழு பட்டியலை பாருங்கள்..

2025 பொது விடுமுறை நாட்கள்:

ஆங்கிலப் புத்தாண்டு – 01.01.2025 புதன்கிழமை

பொங்கல் – 14.01.2025 செவ்வாய்க்கிழமை

திருவள்ளுவர் தினம் – 15.01.2025 புதன்கிழமை

உழவர் திருநாள் – 16.01.2025 வியாழக்கிழமை

குடியரசு தினம் – 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை

தைப்பூசம் – 11.02.2025 செவ்வாய்க்கிழமை

தெலுங்கு வருடப் பிறப்பு – 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை

ரம்ஜான் (Idu’l Fitr) – 31.03.2025 திங்கட்கிழமை

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்) 01.04.2025 செவ்வாய்க்கிழமை

மகாவீரர் ஜெயந்தி – 10.04.2025 வியாழக்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் – 14.04.2025 திங்கட்கிழமை

புனித வெள்ளி – 18.04.2025 வெள்ளிக்கிழமை

மே தினம் – 01.05.2025 வியாழக்கிழமை

மொகரம் – 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர தினம் – 15.08.2025 வெள்ளிக்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி – 16.08.2025 சனிக்கிழமை

விநாயகர் சதுர்த்தி – 27.08.2025 புதன் கிழமை

மிலாதுநபி – 05.09.2025 வெள்ளிக் கிழமை

ஆயுத பூஜை – 01.10.2025 புதன்கிழமை

விஜயதசமி – 02.10.2025 வியாழக்கிழமை

தீபாவளி – 20.10.2025 திங்கட்கிழமை

கிருஸ்துமஸ் – 25.12.2025 வியாழக்கிழமை