வலி இல்லாமல் தற்கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்.. சுவிஸ் விஞ்ஞானியின் முயற்சி..!

By Bala Siva

Published:

 

சுவிட்சர்லாந்து நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு விஞ்ஞானி ஒருவர் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளில் தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் மனதை மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் விஞ்ஞானி ஒருவர் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலைக்கு அனுமதி இல்லை என்றாலும் கருணை கொலைக்கு அனுமதி உண்டு. வாழ்க்கையில் முடித்துக் கொள்ள விரும்புவர்கள் தற்கொலை செய்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்  என்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தி லாஸ்ட் ரெசார்ட் என்ற அமைப்பு வலியின்றி சந்தோஷமாக மரணம் அடைய ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

இந்த இயந்திரத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் அமர்ந்து கதவை மூடிக்கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் குறையும் என்றும் அவர் மயக்கம் அடையும் வரை மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபரின் மனத்திறன் மதிப்பீடு உள்ளிட்ட சிலவற்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அதன் பின்னர்தான் அவர் தற்கொலை செய்ய அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள வருபவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே உட்கார்ந்த 30 வினாடிக்குள் சுயநினைவு இழந்து விடுவார் என்றும் அதன் பிறகு அவரது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வாகனத்தில் உட்கார்ந்து தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களுக்கு எந்த விதமான அச்சம் மூச்சு திணறல் இருக்காது என்றும் மரணம் அடைவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே அவர் சுயநினைவை இழந்து விடுவார் என்றும் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.